20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்

அரியாங்குப்பம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
Published on

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.

மின்சாதன பொருட்கள் சேதம்

நேற்று  இரவு அரியாங்குப்பம், பூரணாங்குப்பம், தவளக்குப்பம், மணவெளி பகுதிகளில் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரியாங்குப்பம், மணவௌ தபால்காரர் வீதி, அய்யனார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.

அரிய வகை மரம் சாய்ந்தது

பூரணாங்குப்பம் அய்யனார் கோவில் அடர்வன காட்டில் சுமார் 100 ஆண்டு பழமையான 'மாவிலங்கம்' எனும் அரிய வகை மரம் இருந்தது. சூறைகாற்றுடன் பெய்த மழையால் அந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த மரம் மரப்பாச்சி பொம்மை செய்ய பயன்படுத்தப்படும். அரியவகை மரம் சாய்ந்து விழுந்தது சமூக ஆர்வலரிடையே கவலை அடைய செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com