

பிரபல ஹாலிவுட் நடிகர் மிட்செல் ரியான். இவர் லையர் லையர், மேக்னம் போர்ஸ் உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்து இருக்கிறார். மெல் சிப்சன் இன் லெதல் வெப்பன் படத்தில் வில்லத்தமான வேடம் ஏற்றார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். மிட்செல் ரியான் நடித்த டார்க் ஷேடோஸ், தர்மா அண்ட் கிரேக் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த மிட்செல் ரியானுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மிட்செல் ரியான் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. மிட்செல் ரியான் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.