கருவடிக்குப்பத்தில் முதியவர் பிணம்

புதுவை கருவடிக்குப்பத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார்.
கருவடிக்குப்பத்தில் முதியவர் பிணம்
Published on

புதுச்சேரி

புதுவை கருவடிக்குப்பம் மெயின்ரோட்டில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கருப்பு சிவப்பு கட்டம்போட்ட சட்டையும், காப்பி கலர் கட்டம்போட்ட கைலியும் அணிந்திருந்தார். அவரது வலது கையில் ரஜினி என்றும், இடது கையில் ரேகா என்றும் பச்சை குத்தியிருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் புதுவை லப்போர்த் வீதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். அவர் சாம்பல் நிற அரைக்கால் சட்டை அணிந்துள்ளார். அவர் யார்? என்பது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com