இறந்தவர் சொத்துக்கள்

இறந்தவர்களின் சொத்துகளை மீட்பது பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டால் கடினமான சூழ்நிலையை சமாளிக்கலாம்.
இறந்தவர் சொத்துக்கள்
Published on

மரணம் என்பது தவிர்க்க முடியாதது. சில மரணங்கள் நம்மை அழவைக்கும். சில மரணங்கள் நமக்கு பயத்தை ஏற்படுத்தும்.

எதிர்பாராத மரணங்கள் நம்மை அழவைப்பதை விட பயத்தை அதிகப்படுத்தும். ஒருவரை சார்ந்து வாழ பழகிக்கொண்ட நாம் திடீரென இல்லாமல் போனால் ஒட்டுமொத்தமும் கேள்விகுறியாக இருக்கும். அவருடைய சொத்துகள், கணக்கு விவரங்கள், கடன்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் என அனைத்தைப் பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம். ஆனால் இதுபற்றிய விவரங்கள் தெரியாதவர்களுக்கு மிகக்கடினமாக இருக்கும். எப்படி இதையெல்லாம் மீட்கப் போகிறோம் என்ற கவலை இருக்கும். இறந்தவர்களின் சொத்துகளை மீட்பது பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டால் கடினமான சூழ்நிலையை சமாளிக்கலாம்.

இறந்தவர்களுடைய சொத்துகளை மீட்க வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனம், மியூச்சுவல் பண்ட், அரசாங்க நிறுவனங்கள் என எதை அணுக வேண்டும் என்றாலும் நீங்கள் இறப்புச் சான்றிதழைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் அவருடைய கணக்கு விவரங்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். தனியான அல்லது இணைந்த கணக்காக உள்ளதா? என்பதைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

இறந்தவரின் உயில் உங்களிடம் இருந்தால் எளிமையாக சொத்துகளை மாற்றிக் கொள்ள முடியும். உயில் உங்களிடம் இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகி சட்ட வாரிசு சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ்கள் பெற்றபிறகு சொத்துகளின் விவரங்கள், முதலீட்டு விவரங்கள் பற்றி பட்டியல் தயாரித்துக் கொள்ள வேண்டும். சொத்துகள், வங்கி கணக்குகள், டிமேட் கணக்கு விவரங்கள், மியூச்சுவல் பண்ட், பி.எப். முதலீட்டு விவரங்கள், வங்கி லாக்கர் விவரங்கள், கடன் விவரங்கள், இன்சூரன்ஸ் விவரங்கள் என அனைத்திற்கும் ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொண்டு கிளைம் செய்ய வேண்டும்.

இறந்தவருக்கு எவ்வளவு கடன் இருக்கிறது, என்னென்ன கடன்கள் இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கடன்களை திருப்பி செலுத்துவதற்கு என்னென்ன சொத்துகள் இருக்கின்றன என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டு கடன் வழங்கிய நிறுவனங்களை அணுக வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com