கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி
Published on

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள தேனங்குடிபட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது45). குவாரியில் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று கொட் டாம்பட்டி அருகே உள்ள திருச்சுனையில் உள்ள கல் குவாரியில் வேலை முடித்து விட்டு அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்றுள் ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் முகத்தில் அடி பட்டு நீரில் மூழ்கி இறந்து விட்டார். தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் பாண்டியின் உடலை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com