மின்கம்பத்தில் மோதி கட்டிட தொழிலாளி பலி

மின்கம்பத்தில் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.
மின்கம்பத்தில் மோதி கட்டிட தொழிலாளி பலி
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 40). சென்ட்ரிங் வேலை பார்த்து வரும் இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அச்சுந்தன்வயல் - பேராவூர் இடையே உள்ள புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானார். அந்த வழியாக சென்ற அவரின் அண்ணன் அருணாசலபாண்டி மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிலநிமிடங்களில் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அவரின் மனைவி பேச்சியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com