மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு

திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு
மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு
Published on

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 50). விவசாயியான இவர் பில்ராம்பட்டு கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக வயல்வெளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் முனிகிருஷ்ணன் என்பவர் தான் பயிர் செய்திருந்த மணிலாவுக்கு காட்டு பன்றிகள் மூலம் பாதிப்பு ஏற்பட்டதால் யாருக்கும் தெரியாமல் மின்வேலி அமைத்து இருந்தார். இதை அறியாத ஏழுமலை அந்த வயல் வழியாக செல்ல முயன்றபோது மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com