செட்டிகுளக்கரையில் கீழே விழுந்த மெக்கானிக் சாவு

செட்டிகுளக்கரையில் கீழே விழுந்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
செட்டிகுளக்கரையில் கீழே விழுந்த மெக்கானிக் சாவு
Published on

ஆலங்குடி:

கும்பகோணம் அருகே உள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது 40). இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் டிராக்டர் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவர், ஆலங்குடி சந்தப்பேட்டை அருகில் உள்ள சித்திவிநாயகர் கோவில் செட்டிகுளக்கரையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளக்கரை படியில் கால் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலயே இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராகவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com