பாகலூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் சாவு யார் அவர்? போலீசார் விசாரணை

பாகலூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் இறந்தார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகலூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் சாவு யார் அவர்? போலீசார் விசாரணை
Published on

ஓசூர்:

பாகலூர் அருகே மாலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த வாலிபர், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com