விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சாவு

விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழந்தார்
விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சாவு
Published on

பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் அண்ணா நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சூரியா (வயது 21). இவர் கடந்த 17-ந் தேதி மாலை தனது நண்பரான செங்குணம் அருகே உள்ள பாலம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சக்திவேல் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் துறைமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் துறைமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சூரியா, சக்திவேலை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூர்யா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சக்திவேல் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com