லாரி மோதி வாலிபர் சாவு

லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார்
லாரி மோதி வாலிபர் சாவு
Published on

தா.பேட்டை
தா.பேட்டை அருகே உள்ள செவந்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேக்கமலை. இவரது மகன் இளஞ்செழியன் (வயது 21). இவர், தா.பேட்டையில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். நேற்று வேலை நிமித்தமாக தா.பேட்டையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு இளஞ்செழியன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் ஏரிக்கரை அருகே எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், இளஞ்செழியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளஞ்செழியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன் வழக்குபதிந்து லாரி டிரைவர் செந்தில் (35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com