மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
Published on

குன்னம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அருண்பாண்டி(வயது 30). வேலைநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பினார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக அத்தியூர் குடிகாடு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். வயலூர் கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அருண்பாண்டி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com