கொல்லங்கோடு அருகே டெம்போ மோதி வாலிபர் சாவு

கொல்லங்கோடு அருகே டெம்போ மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கொல்லங்கோடு அருகே டெம்போ மோதி வாலிபர் சாவு
Published on

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே டெம்போ மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சாவு

கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் அருண்சஞ்சு (வயது26). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கோனசேரியில் இருந்து கொல்லங்கோடு அருக உள்ள நடைக்காவு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டெம்போ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருண்சஞ்சு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com