வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் சாவு
Published on

நத்தம்:

நத்தம் அருகே உள்ள பன்னியான்மலை கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 23). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், நத்தம் சேர்வீடு நான்கு வழிச்சாலை பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து அர்ச்சுனன் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், அர்ச்சுனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com