மதுபானக்கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்

புதுவையில் தரக்குறைவாக பேசி அடித்து கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபானக்கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்
Published on

அரியாங்குப்பம்

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் சண்முகம்நகர் ரத்னவேல் தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). இவர் கடலூர்-பாண்டி மெயின் ரோட்டில் தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார்.

தவளக்குப்பம் அடுத்த தமிழக பகுதியான பெரியகாட்டுபாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (வயது 24), என்பவர் சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வேறு கடைக்கு சென்றுவிட்டு பின்னர் வண்டி எடுக்க வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் நின்று இருந்த காசாளர் சூர்யாவிடம் வீண் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரவிந்தன், சூர்யாவை தரக்குறைவாக பேசி கையால் அடித்து கொலை மிரட்டல் விட்டுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com