பெண்ணுக்கு கொலை மிரட்டல்; விவசாயி கைது

எட்டயபுரம் அருகே பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்
பெண்ணுக்கு கொலை மிரட்டல்; விவசாயி கைது
Published on

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள பொன்னையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் (வயது 49). இவர் அங்குள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கணக்கராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராசையா மகன் சக்திவேல்(52) என்ற விவசாயி, தனது தந்தை பெயரில் உள்ள வீட்டிற்கு தனது பெயரில் வீட்டு வரி ரசீது தருமாறு நரசிம்மனிடம் கேட்டுள்ளார். இதற்கு நரசிம்மன் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் , நரசிம்மனின் மனைவி மகேஸ்வரியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் எட்டயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com