

வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி சத்யா பால் பண்ணை தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 46) வைக்கோல் கட்டும் தொழிலாளி. இவர் மொபட்டில் நீரேத்தான் பகுதியில் உள்ள வயல்வெளியில் வைக்கோல் ஏற்றி விட்டு மதியம் சாப்பிடுவதற்காக யூனியன் ஆபீஸ் பிரிவு சாலையில் இருந்து மொபட்டில் வந்து போது எதிர்பாராத விதமாக பெரியகுளத்தில் இருந்து மதுரை சென்ற தனியார் பஸ் மொபட்டின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பெருமாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் சேர்வை ஆகியோர் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் வத்தலகுண்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த விக்ரம் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.