வாட்ஸ்-அப்பில் அவதூறு: துடைப்பத்துடன் திரண்டு பெண்கள் மறியல்

வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துடைப்பத்துடன் திரண்டு பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வாட்ஸ்-அப்பில் அவதூறு: துடைப்பத்துடன் திரண்டு பெண்கள் மறியல்
Published on

அருப்புக்கோட்டை,

ஒரு சமூகத்தினரை அவதூறாக பேசியது வாட்ஸ்-அப்பில் பரவியதால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலவரம் வெடித்தது. இந்த நிலையில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

அருப்புக்கோட்டை திருச்சுழி ரோடு ஆத்திபட்டி விலக்கில் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் துடைப்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.

தகவல் அறிந்து துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், முத்து மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியல் போராட்டதில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனைதொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மறியலால் அருப்புக்கோட்டையில்இருந்து ஆத்திபட்டி வழியாக திருச்சுழி, ராமேசுவரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com