மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து; சம்பாஜி பிடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்

மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சம்பாஜி பிடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து; சம்பாஜி பிடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
Published on

மும்பை, 

மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சம்பாஜி பிடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

சர்ச்சை கருத்து

இந்து அமைப்பை சேர்ந்த சம்பாஜி பிடே வெளியிடும் கருத்துகள் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாவது வழக்கம். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமராவதி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் மகாத்மா காந்தியின் குடும்பத்தை பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். இந்த பிரச்சினையை சட்டசபையில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் எம்.எல்.ஏ. எழுப்பினார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து அவர் கூறியதாவது:- சம்பாஜி பிடேவின் சமீபத்திய கருத்துகள் வெட்கக்கேடானது. தேசத் தந்தையான மகாத்மா காந்தி பற்றி அவரது கருத்துகள் நாட்டையே களங்கப்படுத்தி உள்ளது. அவர் மீண்டும், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகிறார். அரசியல் நலன்களுக்காக அவருக்கு யார் துணை போகிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலர் இதுபோன்ற முற்போக்கு சிந்தனைகளை அழிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகின்றனர். சம்பாஜி பிடே மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com