டெல் ஹப் மானிட்டர்

டெல் நிறுவனம் 24 அங்குல தொடு திரையுடன் கூடிய ஹப் மானிட்டரை (திரை) அறிமுகம் செய்துள்ளது.
டெல் ஹப் மானிட்டர்
Published on

கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டெல் நிறுவனம் 24 அங்குல தொடு திரையுடன் கூடிய ஹப் மானிட்டரை (திரை) அறிமுகம் செய்துள்ளது. தொடுதிரை மற்றும் எதெர்நெட் இணைப்பு ஆகிய இருமுறைகளில் செயல்படும் முதலாவது மானிட்டர் இதுவாகும். கைகளின் 10 விரல்களையும் இதில் பதித்து தொடுதிரையில் செயல்படுத்தலாம். ஓவியம் வரைவது போன்ற பணிகளையும் செய்ய முடியும். அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஸ்டாண்டை கொண்டுள்ளது. இதை 60 டிகிரி கோணத்தில் வளைக்க முடியும். யு.எஸ்.பி. சி டைப் இணைப்பு மூலம் இதை செயல்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.26,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com