

தோகைமலை
உரம் விலை உயர்வை கண்டித்து தோகைமலையில் நேற்று அகில இந்திய விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தோகைமலை விவசாய சங்க பொருளாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் சக்திவேல், மாநில குழு உறுப்பினர் இலக்குவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் இலக்குவன் சிறப்புரையாற்றினார். இதில் விவசாய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உரம் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.