பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Published on

ஊத்துக்கோட்டை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும், உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்க வேண்டும், மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசியை தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊத்துக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஊத்துக்கோட்டை வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் அன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நீல வானத்து சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com