

திருப்புவனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விலை உயர்வு
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைசிறுத்தை கட்சியினர் சார்பில் திருப்புவனத்தில் உள்ள மதுரை மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தரபாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் மோகன், விடுதலைசிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் கண்ணன், வக்கீல் நாகரத்தினம், நகர் செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சக்திவேல், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவும், ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ரூ.7500 கொரோனா நிவாரண நிதியாக வழங்கக்கோரியும், 10 கிலோ உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசிகளை தடையின்றி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும், செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் வரிசையாக நின்றனர்.