த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகாபுதீன் தலைமை தாங்கினார். ராஜ் முகமது முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ பொழிலன், மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவன தலைவர் மங்கையர் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், 'பா.ஜ.க. கொள்கை இல்லாத கட்சி. அவர்களின் நோக்கம் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது தான். இந்திய நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்'.என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com