மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் கடைவீதியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Published on

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் கடைவீதியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் தமீம் அன்சாரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செந்தமிழ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு குறைக்கவேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை பாதிக்கும் நீட், கியூட் போன்ற தகுதித்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com