

உசிலம்பட்டி
உசிலம்பட்டி பஸ் நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்டு மற்றும் ஏ.ஐ.டி. யு சி தொழிற்சங்கம் சார்பாக மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, ஏறிவரும் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், தமிழக அரசு சொத்து வரி உயர்வை கைவிடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் விருமாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி கிளைச் செயலாளர்கள் ராமர், ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் நந்தா சிங், மாவட்ட செயலாளர் தாமஸ் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் ஜோதி ராமலிங்கம், உழைக்கும் மகளிர் சங்கம் ஜெயந்தி நந்தா சிங், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.