''டச் ஸ்கிரீன்'' லேப்டாப்களை வாங்கப் போகிறீர்களா?


டச் ஸ்கிரீன் லேப்டாப்களை வாங்கப் போகிறீர்களா?
x
தினத்தந்தி 15 Oct 2023 1:30 AM GMT (Updated: 15 Oct 2023 1:30 AM GMT)

சாதாரண லேப்டாப்களில், கீபோர்டை விரல்களால் எளிதாக இயக்க முடியும். தொடுதிரையில், அனைத்தும் தொட்டு இயக்கும் வசதியுடன் இருப்பதால், விரல்களை கொண்டு இயக்கும்போது சற்றே கடினமாக இருக்கும். எனவே, தொடுதிரையை இயக்கும் வகையில் பென் வசதி தரப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

ன்றைய அவசர உலகில், வேலைகளை எளிமையாக்கக்கூடிய தொழில்நுட்பத்தில் முக்கியமானது தொடுதிரை வசதி. வீட்டு உபயோகம் முதல் அலுவலகத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள் வரை அனைத்திலும் தற்போது தொடுதிரை வசதி வந்துவிட்டது. அதில், ஒன்றுதான் ''டச் ஸ்கிரீன்'' லேப்டாப். தற்போது, இந்தியாவில் இது அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இருந்தாலும், ''டச் ஸ்கிரீன்'' லேப்டாப்களை எப்படி வாங்குவது? எப்படி பயன்படுத்துவது? என்பதில் பலருக்கும் குழப்பங்கள் உள்ளன.

அதற்கான சில டிப்ஸ்:

தன்மையை ஆராயுங்கள்: தொடுதிரை வசதி உள்ள லேப்டாப்கள் வேகமாக செயல்படும். எனவே, செயல்படும் வேகம், அதில் இருக்கும் நேவிகேஷன்களின் செயல்பாடுகள், ஸ்வைப்கள் என அனைத்தின் தன்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பென் வசதி: சாதாரண லேப்டாப்களில், கீபோர்டை விரல்களால் எளிதாக இயக்க முடியும். தொடுதிரையில், அனைத்தும் தொட்டு இயக்கும் வசதியுடன்இருப்பதால், விரல்களை கொண்டு இயக்கும்போது சற்றே கடினமாக இருக்கும். எனவே, தொடுதிரையை இயக்கும் வகையில் பென் வசதி தரப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

2 இன் 1 வகைகள்: சாதாரண லேப்டாப்களில், திரையும், கீ போர்டும் இணைந்து இருக்கும். தொடுதிரை லேப்டாப் 2 இன் 1 வசதியுடன் கிடைக்கிறது. இதில், பழைய லேப்டாப்களை போன்று கீ போர்டு இருக்கும். இதனுடன் இயக்க விரும்பாவிட்டால், திரையை மட்டும் தனியாக கழற்றி, டேப்லெட் வடிவில் மாற்றியும் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தும்போது, எந்த இடத்திற்கும் எளிதாக கொண்டு செல்லலாம்.

அளவுகள்: லேப்டாப்பை பொறுத்தவரை சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றது. உங்களுடைய தேவையை பொறுத்து எந்த அளவில் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். பொதுவாக, லேப்டாப்கள் அவற்றின் காட்சி அளவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன.

போர்டுகள்: லேப்டாப்பை தேர்வு செய்யும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது அவற்றின் போர்டுகளை தான். பழைய லேப்டாப் மாடல்களில் 3 யு.எஸ்.பி.போர்ட், ஆடியோ ஜாக் ஆகியவை இருக்கும். தற்போது வரும் மாடல்களில், யு.எஸ்.பி. டைப் சி, தண்டர்போல்ட் 4, யு.எஸ்.பி. 4, எஸ்.டி. கார்டு ரீடர், எஸ்.டி.எம்.ஐ. ஆகிய போர்டுகள் இருக்கும். இந்த வசதிகள் ''டச் ஸ்கிரீன்'' லேப்டாப்களிலும் கட்டாயம் இருப்பதை உறுதி செய்து வாங்க வேண்டும்.

விலை: ''டச் ஸ்கிரீன்'' லேப்டாப்களின் விலை சற்றே அதிகமாக இருக்கும். அவற்றில் உங்களுடைய பட்ஜெட்டிற்கும், தேவைக்கும் ஏற்ற வகையிலான லேப்டாப்களை தேர்வு செய்து வாங்க வேண்டும்.


Next Story