நாமக்கல்லில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்திற்கு மத்திய அரசே காரணம் என கூறி, மத்திய அரசை கண்டித்தும், அங்கு மீண்டும் அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிட்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் சுகுமார், முனுசாமி, காமராஜ் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அசோகன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி, நகர துணை செயலாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வக்கீல் கார்த்திகேயன், கிருஷ்ணசாமி, மனோகரன், கணேஷ்குமார், ராசிபுரம் மணிமாறன், வெண்ணந்தூர் செங்கோட்டுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.