பெருந்துறை பகுதியில் ரூ.2¼ கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

பெருந்துறை பகுதியில் ரூ.2¼ கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பெருந்துறை பகுதியில் ரூ.2¼ கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்
Published on

சென்னிமலை,

பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாச்சி ஊராட்சி எருக்காட்டுவலசு காலனியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம், பெரியவிளாமலை ஊராட்சி கண்ணவேளாம்பாளையம் கிராமத்தில் ரூ.33 லட்சம் மதிப்பில் ஜெ.ஜெ.எம் திட்டத்தில் தனியார் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, மேலும் இதே ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்பட ரூ.2 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெருந்துறை தொகுதி தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி மணிமாலா, உதவி பொறியாளர் அஜய், மாவட்ட கவுன்சிலர் ஏ.வி.பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், துணை தலைவர் உமா மகேஸ்வரன், ஊராட்சி தலைவர்கள் ஜீவானந்தம், சிவகாமி குழந்தைசாமி, பூவிழி, முன்னாள் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர்கள் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி, குழந்தைசாமி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com