சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தை திருவிழா - வண்டி வேடிக்கை

அலங்கார வண்டிகளில் பல்வேறு வேடங்களில் பக்தர்கள் வீதி உலா வந்தனர்.
சிவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் வேடம் அணிந்து வந்த பக்தர்கள்.
சிவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் வேடம் அணிந்து வந்த பக்தர்கள்.
Published on

சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் மற்றும் வழி வாய்க்கால் காளியம்மன் கோவில்களில் தை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அலங்கார வண்டிகளில் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வீதி உலா வந்து அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

இதில் சிவபெருமான், தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழன், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கட்டிய ராஜேந்திர சோழன் உள்ளிட்ட வேடங்களில் வந்தவர்கள் கவனம் ஈர்த்தனர்.

அலங்கார வண்டியில் வந்தவர்களையும், மற்றும் பல்வேறு வேடங்களில் சிறப்பாக வந்தவர்களையும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

சேலத்தில் நடைபெறும் திருவிழாக்களின்போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். அதில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிகழ்ச்சியில் பெரும்பாலான பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com