சாலியத்தெரு இசக்கி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜையில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அரமன்னம் சாலியத்தெரு ஸ்ரீ இசக்கி அம்மன் திருக்கோவில் வருடாந்திர திருவிழா கடந்த 10-ம் தொடங்கி நடை பெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலையில் கணபதி ஹோமம், தேவி பாராயணம் அதை தொடர்ந்து சமய வகுப்பு, மாணவ மாணவிகளுக்கான பண்பாட்டு போட்டிகள், கோலப் போட்டிகள் மற்றும் மதியம் சமபந்தி விருந்து அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நெட்டாங்கோடு ஸ்ரீ சாரதேஷ்வரி ஆஸ்ரம யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி குத்துவிளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். இதில் 1008 பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com