வேலாயுதம்பாளையம் ஐயப்ப சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்

சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஐயப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வேலாயுதம்பாளையம் ஐயப்ப சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
Published on

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ஐயப்ப சுவாமி கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் அக்னிகுண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர். கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு அதில் புனித நீர் ஊற்றி பூக்கள் வைத்து பூஜை செய்தனர். பூஜை நிறைவடைந்ததும் 108 வலம்புரி சங்குகளில் இருந்த பூனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமியை,. வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com