பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

பழனி மலையில் உள்ள ரோப்கார் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது.
பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
Published on

திண்டுக்கல்,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை இருக்கும்.

இந்நிலையில், ஞாயிறு விடுமுறை மற்றும் அமாவாசை தினத்தை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் பழனி மலையில் உள்ள ரோப்கார் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

கூட்ட நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசித்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com