

திருவனந்தபுரம்,
திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆடி மாத பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் வழக்கமான மாத பூஜை வழிபாடுகள் நடைபெறும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.