கொனார்க் சூரியனார் கோவில்


கொனார்க் சூரியனார் கோவில்
x

கொனார்க் கோவிலின் தனித்தன்மையை உணா்ந்த யுனெஸ்கோ அமைப்பு, இக்கோவிலை உலக பாரம்பாியச் சின்னமாக அறிவித்துள்ளது.

இந்து சமய வழிபாடுகளில் சூரிய வழிபாடு முக்கியமான வழிபாடு ஆகும். தமிழகம் உள்பட இந்தியாவின் சில இடங்களில் மட்டுமே சூரிய பகவானுக்கு தனிக்கோவில் இருக்கிறது. அவற்றில் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற இடத்தில் கடற்கரையோரம் அமைந்த 'சூரியனார் கோவில்' முக்கியமானது.

கொனார்க் சூரியனார் கோவில், கீழை கங்கா் வம்சத்தைச் சோ்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால், 13-ம் நூற்றாண்டில் (கி.பி. 1236 - 1264) கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

படையெடுப்பு, பராமாிப்பின்மை, கடல் சீற்றம் போன்றவற்றால் இந்த ஆலயம் பல சேதங்களைச் சந்தித்திருந்தாலும், எஞ்சியிருக்கும் ஆலய அமைப்பும், அதில் உள்ள சிற்ப வேலைபாடுகளும், கலைநயம் வியப்படையச் செய்கின்றன.

ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட, 24 சக்கரங்கள் கொண்ட தோில் இந்த ஆலயம் எழுந்தருளியிருப்பது போல வடிமைக்கப்பட்டுள்ளது. இதில் குதிரைகள் என்பது 7 நாட்களையும், சக்கரங்கள் என்பது 24 மணி நேரத்தையும் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

சிவப்பு மணற்பாறைகள் மற்றும் கருப்பு கிரானைட் கற்களைக் கொண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஆலயத்தை 'பிளாக் பகோடா' (கருப்பு கோவில்) என்கிறார்கள். இதனைக் கட்டி முடிக்க பேரரசின் 12 ஆண்டு வருமானம் செலவிடப்பட்டுள்ளது.

இக்கோவில் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது. ஏனெனில் இந்த ஆலயத்திற்குள், அதனைத் தாங்கும் தூண்கள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு கற்களுக்கும் இடையே இரும்புத் துண்டுகளால் இணைத்துக் கட்டியுள்ளனா். ஒரு முறை இந்தக் கோவில் மேற்பகுதி சேதமடைந்து விழுந்தது. அப்போதுதான் அதில் சுமார் 50 டன் எடை கொண்ட காந்தக்கல் இருந்தது தொியவந்திருக்கிறது. ஆலயம் தூண்கள் இன்றி இருந்ததற்கான ரகசியம் அப்போதுதான் வெளிப்பட்டது. கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிலின் அமைப்பு முன்காலத்தில் மூன்று பிரிவுகளாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு நான்கு மாதத்திலும் ஒவ்வொரு பிரிவின் வழியாக சூரிய ஒளி மூலவா் சிலை மீது படும் வகையில் கட்டிடத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இதன் தனித்தன்மையை உணா்ந்தே, யுனெஸ்கோ அமைப்பு இதனை உலக பாரம்பாியச் சின்னமாக அறிவித்துள்ளது.

இந்த ஆலயம் சிற்பங்களால் நிரம்பியுள்ளது, குழந்தைகளைக் கவரும் பறவை, விலங்குகளின் சிற்பம், இளைஞா்களைக் கவரும் வகையில் ஊடல், கூடல், ஆடல் சிற்பம், பொியவா்களைக் கவரும் ஆன்மிக சிற்பங்கள் போன்றவை நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி, புவனேஸ்வர், பிப்லி போன்ற பல நகரங்களில் இருந்து பேருந்துகள் கொனார்க் சூரியன் கோவிலுக்கு இயக்கப்படுகின்றன. பூரி ரெயில் நிலையத்தில் இருந்து 31 கிலோமீட்டா் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது. விமானம் மூலமாக வந்தால் புவனேஸ்வா் விமான நிலையத்தில் இறங்கி, 64 கிலோமீட்டா் சென்றால் கோவிலை அடையலாம்.

1 More update

Next Story