கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருக்கார்த்திகை தீபத் திருவிழா

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் வருகிற 13-ந்தேதி அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது திருக்கார்த்திகை தீபத் திருவிழா
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

இந்நிலையில் அண்ணாமலையார் திருக்கோவிலில் அண்ணாமலையார் சன்னதி அருகே அமைந்துள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை முடிந்து, அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

பின்னர், வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனி நடைபெறும். மேலும், இரவு உற்சவத்தில் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பவனி வருகிறார். தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும், காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி திருவீதி உலா மாட வீதியில் நடைபெறும். விழாவின் 6ம் நாளான வரும் 9ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளான 10ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் வருகிற 13-ந்தேதி அதிகாலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், 1,500 மீட்டர் திரி (பருத்தி துணி) பயன்படுத்தப்படும். மகா தீபத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com