இந்த வார விசேஷங்கள்: 10-3-2026 முதல் 16-3-2026 வரை

திருவில்லிபுத்தூர் ஆலயத்தில் மார்ச் 15-ம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
ஆண்டாள்-ரெங்கமன்னார்
ஆண்டாள்-ரெங்கமன்னார்
Published on

இந்த வார விசேஷங்கள்

10-ந் தேதி (செவ்வாய்)

* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ராஜ அலங்காரம், அம்ச வாகனத்தில் திருவீதி உலா.

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

11-ந் தேதி (புதன்)

* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கோவர்த்தனகிரியில் பந்தலடி சென்று திரும்புதல்.

* திருவாரூர் தியாகராஜர் புறப்பாடு.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம ருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (வியாழன்)

திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (வெள்ளி)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

* திருவாரூர் தியாகராஜர் பவனி.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (சனி)

* காரடையான் நோன்பு.

* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி காலை பல்லக்கில் பவனி, இரவு ராஜாங்க அலங்காரம்.

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள, மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* சர்வ ஏகாதசி.

* திருநெல்வேலி கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், திருப்பதி ஏழுமலையான் தலங்களில் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* பிரதோஷம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* மேல்நோக்கு நாள்.

Also Read
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் தெப்ப உற்சவம்
ஆண்டாள்-ரெங்கமன்னார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com