பேசும் கன்னிமார் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

பேசும் கன்னிமார் கோவிலில் 7 அம்மன்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது
சிறப்பு அலங்காரத்தில் கன்னிமார்
சிறப்பு அலங்காரத்தில் கன்னிமார்
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டை அருகில் உள்ள பாறைப்பட்டியில் பழமையான பேசும் கன்னிமார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாத சர்வ அமாவாசை பூஜை நடைபெற்றது. மேலும், உலக நன்மை வேண்டியும், போர் முடிவுக்கு வர வேண்டியும் கூட்டு வழிபாடு நடந்தது.

இதையொட்டி சித்தி விநாயகர், மந்தை கருப்பண சுவாமி கோவில்களில் பூஜைகள் நடந்தன. மேலும் பேசும்கன்னிமார் கோவிலில் 7 அம்மன்களுக்கும் 7 வகை வண்ண மலர்கள், எலுமிச்சம் பழங்கள், போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு, பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாறைப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com