வெட்டுக் காட்டுபுதூரில் ஆனந்த தில்லை நடராஜர் திருக்கல்யாணம்

திருக்கல்யாண வைபவத்திற்கு முன்னதாக சிவகாமி தாயாருக்கும், நடராஜ பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டு புதூரில், சிவகாமி தாயார் உடனாகிய ஆனந்த தில்லை நடராஜர் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணபதி ஹோம வழிபாட்டுடன், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. நேற்று காலை 11:00 மணிக்கு சிவகாமி தாயாருக்கும் ஆனந்த தில்லை நடராஜ பெருமானுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது .
முன்னதாக சிவகாமி தாயாருக்கும், நடராஜ பெருமானுக்கும் பால், தயிர், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், திருநீறு போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.. அதனைத் தொடர்ந்து சிவகாமி தாயார், நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் புத்தர்களுக்கு காட்சியளித்தனர். மாலையில் திருக்கயிலாய வாத்தியத்துடன் சுவாமி திருவீதி உலா வந்தார்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






