திருமலையில் அனந்தாழ்வாரின் 972-வது அவதார மகோற்சவம்

அனந்தாழ்வாரின் வம்சத்தினர் திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் புஷ்ப கைங்கர்யம் என்றென்றும் தொடர வேண்டும் என தேவஸ்தான இணை அதிகாரி ஏ.சரத் தெரிவித்தார்.
அனந்தாழ்வாரின் அவதார மகோற்சவத்தில் பங்கேற்று பேசிய ஜீயர் சுவாமிகள்.
அனந்தாழ்வாரின் அவதார மகோற்சவத்தில் பங்கேற்று பேசிய ஜீயர் சுவாமிகள்.
Published on

திருமலை,

திருப்பதி திருமலையில் உள்ள அனந்தாழ்வார் தோட்டத்தில் (புரசைவாரி தோட் டம்) வைணவ பக்தர்களில் சிறந்தவரும் ஆச்சாரியருமான அனந்தாழ்வாரின் 972-வது அவதார மகோற்சவம் நடந்தது.

மகோற்சவத்தில் முதன்மை விருந்தினராக தேவஸ்தான இணை அதிகாரி ஏ.சரத் பங்கேற்று பேசுகையில், அனந்தாழ்வாரின் அவதார மகோற்சவத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது எனது பூர்வஜென்ம புண்ணியம். பக்தி என்பது வெறும் பிரார்த்தனை மட்டுமல்ல, பக்தி என்பது சேவை என்பதை தனது வாழ்க் கையால் நிரூபித்த மகானாக ஆனந்தாழ்வார் விளங்குகிறார்.

அனந்தாழ்வாரின் வம்சத்தினர் திருப்பதி ஏழுமலையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வருவதை நினைவூட்டி, இந்தப் புனித பாரம்பரியம் என்றென்றும் தொடர வேண்டும், என விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆனந்தாழ்வாரின் வம்சத்தினர் நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி கானம் பாடினர். அதைத்தொடர்ந்து திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.

நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பண்டிதர்கள் வேங்கடாசல இதிஹாசமாலா, ராமானுஜரின் திருமலை யாத்திரை, சுவாமி புஷ்கரணியின் மகிமை, ராமாயண காலக்ஷேபம், திருமலைநம்பி தண்ணீரமுது உற்சவம், மூலவர்களின் திருமஞ்சனம் திருநாமம், திருமலையில் ராமானுஜர் சன்னதி பிரதிஷ்டை, சஹஸ்ர நாமார்ச்சனை வைபவம், திருமலையில் ஜீயர் மடம் நிறுவல், ஏழுமலையானின் சுப்ரபாதம், ஏகாந்த சேவை, திருமலையில் திவ்ய பிரபந்த மரபு, திருமலையின் புண்ணிய தீர்த்தங்கள் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினர். நிகழ்ச்சியில் ஆனந்தாழ்வாரின் வம்சத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com