நீரேத்தான் நவநீத பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நீரேத்தானில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த நவநீத பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோபூஜையும், 7 மணிக்கு ரங்க மன்னார் ஆண்டாள் அழைப்பு, முளைப்பாரி எடுத்தல், காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 10 மணி முதல் 11. 30 மணி வரை துவரிமான் பாலாஜி பட்டர் திருமாங்கல்ய தாரணம் நடத்தினார். 12.30 மணிக்கு ரங்க மன்னார் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை ஊஞ்சல் உற்சவம் மற்றும் பஜனை நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story






