ஆனி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந் தேதி திறப்பு

15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் மாத பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஆனி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந் தேதி திறப்பு
Published on

சபரிமலை,

ஆனி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் மாத பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளு டன் நெய் அபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம், படி பூஜை ஆகியவை நடைபெறும். நடை திறப்ப தையொட்டி, தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவ தாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com