தஞ்சை பெரிய கோவிலில் இன்று 800 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் வழங்கிய அரிசியில் சாதம் தயார் செய்யப்பட்டு, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது.
தஞ்சை பெரிய கோவிலில் இன்று 800 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்
Published on: 

தஞ்சாவூர்,

சிவ வழிப்பாட்டில் மகா சிவராத்திரியை போன்று ஐப்பசி மாதம் பவுர்ணமியில் வரும் அன்னாபிஷேகம் மகத்துவம் வாய்ந்தது. இந்நாளில் அன்னம் (சோறு) அலங்காரத்தில் சிவன் காட்சியளிப்பார். மற்ற நாட்களில் காணும் அபிஷேகத்தை காட்டிலும், அன்னாபிஷேகத்தில் சிவனை காண்பது கர்மவினையை தீர்க்கும்.

இந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனையொட்டி தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேக வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருவுடையார் கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, 12 அடி உயர பெருவுடையாருக்கு 800 கிலோ அரிசி, 750 கிலோ காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் பிரமாண்டமாக அன்னாபிஷேகம் நடந்தது.

பக்தர்கள் வழங்கிய அரிசியில் சாதம் தயார் செய்யப்பட்டு, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டது. அதன்பின் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள், மலர் வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com