அரியலூர்: பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ காட்சி

அரியலூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி தாயார் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு 2 முறை கோவில் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பு அம்சமாகும்.
அரியலூர்: பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ காட்சி
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே காரைக்குறிச்சியில் சவுந்தரநாயகி தாயார் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுக்கு 2 முறை கோவில் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பு அம்சமாகும்.

இதில் சித்திரை மாதத்தில் ஒரு முறையும், பின்னர் ஆவணி மாதத்தில் ஒரு முறையும் கருவறையில் உள்ள லிங்கத்திருமேனி மீது சூரிய கதிர்கள் விழும். தொடர்ந்து 5 நாட்கள் லிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் விழும். சூரிய பகவான் தனது கதிர்களை பாய்ச்சி லிங்கத்தை வழிபடுவதாக ஐதீகம்.

இந்த நிலையில் சித்திரை மாத சூரிய வழிபாடு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 6 மணி 5 நிமிடத்திற்கு சூரிய பகவான் தனது ஆயிரம் கரங்களை நீட்டி காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் பாதங்களை சரணாகதி அடைந்த நிகழ்வு நடந்தேறியது. அடுத்த 5 நிமிடங்களில் சிறிது சிறிதாக லிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் படர்ந்தது. அப்போது லிங்கத் திருமேனி தங்கத்தை உருக்கி ஊற்றியது போல் தகதகவென மின்னியது. இந்த காட்சியை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com