திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

30-ந் தேதி வைகாசி விசாகம் வருவதால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீப திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார் கள்.

இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12.50 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. 30-ந் தேதி கிரிவலம் செல்வது சிறப்பானதாகும்.

பவுர்ணமியையொட்டி 30-ந் தேதி வைகாசி விசாகம் வருவதால் அன்றைய தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பவுர்ணமி கிரிவலம் செல்ல வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com