திருச்செந்தூரில் பா.ஜ.க. நடத்திய பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை

திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்ற பெண்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படடன.
விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்
விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்
Published on

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கிய ஊர்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குபேர பூஜை மற்றும் 4008 திருவிளக்கு பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை குலசேகரன்பட்டினத்தில் முதலாவது பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சிறப்பு பரிசுகளை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து 2-வதாக நேற்று திருச்செந்தூரில் 4008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவிற்கு பா.ஜ.க விவசாய அணி மாநில செயலாளர் சிவமுருக ஆதித்தன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் பூபதி பாண்டியன் வரவேற்று பேசினார். விழாவின் தொடக்கமாக பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் திரைப்பட நடிகைகளான சீதா, நிரோஷா ஆகியோர் விளக்கு பூஜையை தொடங்கி வைத்தனர். பேராசிரியை ஸ்ரீமதி தியாகராஜன் விளக்கு பூஜையை நடத்தினார்.

பூஜையில் பங்கேற்ற பெண்களில் 43 பெண்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுதாவுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும், 2-வது பரிசாக வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்த வசந்தி என்பவருக்கு முக்கால் பவுன் தங்க நாணயமும், 3-வது பரிசாக திருச்செந்தூர் முத்துமாரிக்கு அரை பவுன் தங்க நாணயமும், 4-வது பரிசாக தேரிகுடியிருப்பு வசந்தாவுக்கு கால் பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

Also Read
ரமலான் நாட்களில் நற்காரியங்கள் செய்வோம்..!
விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்

மேலும் 5 முதல் 10 வரை தேர்வானவர்களுக்கு முறையே பிரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்.இ.டி டிவி, எலக்ட்ரிக் தையல் இயந்திரம், செல்போன், வாட்டர் டிஸ்பென்சர் ஆகிய பரிசுகளும், 11 முதல் 20 வரை தேர்வானவர்களுக்கு கிரைண்டர், 21 முதல் 30 வரை மிக்ஸி, 31 முதல் 43 வரை அயன் பாக்ஸ் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. இத்துடன் விளக்கு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Also Read
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com