குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
Published on

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு காலசந்தி பூஜையும், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடந்தது.

மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி அம்மனை போற்றிப் பாடி வழிபட்டனர்.

விளக்கு பூஜையின் நிறைவாக மூலஸ்தான சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com