ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

பெரிய பெருமாள் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 24ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. விழா நாட்களில் தினந்தோறும் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாட வீதிகளில் தினந்தோறும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபட்டனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக மீண்டும் கீழ ரத வீதியை அடைந்தது.
Related Tags :
Next Story






