கோவை சித்தாபுதூர் கோவிலில் ஆறாட்டு விழா: யானைகளில் அய்யப்ப சுவாமி வீதி உலா

இரவு நடைபெற்ற ஆறாட்டு ஜோதி தரிசனத்தில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
யானை மீது எழுந்தருளி வீதி உலா வந்த சுவாமி ஐயப்பன்
யானை மீது எழுந்தருளி வீதி உலா வந்த சுவாமி ஐயப்பன்
Published on

கோவை,

கோவை சித்தாபுதூரில் அய்யப்ப சுவாமி பொற்கோவில் உள்ளது. இந்த கோவிலின் 57-வது திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் சுவாமிக்கு உற்சவ பூஜைகள் நடைபெற்றன. 17-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பள்ளிவேட்டை நடைபெற்றது. பக்தர்கள் நிறைபறை சமர்ப்பித்தல் நிகழ்ச்சி தினமும் நடைபெற்று வருகிறது.

8-ம் நாள் திருவிழாவான நேற்று ஆறாட்டு விழா நடைபெற்றது. காலையில் முளைஎடுத்தல், திருக்கணி தரிசனம், உற்சவ சடங்குகள், விஷ்ணுவிற்கு சிறப்பு பூஜைகள், மாலை 5 மணிக்கு ஆறாட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அலங்கரிக்கப்பட்ட யானையில் அய்யப்ப சுவாமி எழுந்தருளினார். பஞ்சவாத்தியம், காவடி, நாதஸ்வரம், மின் அலங்கார ரதம், சிங்காரிமேளம், சிங்காரி காவடி போன்றவைகளுடன் பக்தர்கள் புடை சூழ அய்யப்பசுவாமி ஊர்வலம் புறப்பட்டது.

இந்த ஊர்வலம் சின்னசாமி நாயுடு ரோடு, கிராஸ்கட் ரோடு 11-வது வீதி, 100 அடி ரோடு, நாராயணசாமி நாயுடு ரோடு வழியாக கோவில் அருகே உள்ள ஆறாட்டு குளத்தை வந்தடைந்தது. இரவு 11 மணிக்கு ஆறாட்டு ஜோதி தரிசனத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது.

இன்று (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு அத்தாழப்பூஜைக்கு பின்னர் குருதி பூஜை நடக்கிறது.

Also Read
நன்மைகளை வாரி வழங்கும் ராம நவமி
யானை மீது எழுந்தருளி வீதி உலா வந்த சுவாமி ஐயப்பன்
X

Daily Thanthi
www.dailythanthi.com