குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றம்

விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 12-ம் தேதி நடராஜ மூர்த்திக்கு பச்சை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தாண்டவ தீபாராதனை நடைபெறும்.
குற்றாலநாதர் கோவிலில் கொடிமரத்திற்கு தீபாராதனை
குற்றாலநாதர் கோவிலில் கொடிமரத்திற்கு தீபாராதனை
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு குற்றாலநாதர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசுத் திருவிழா ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா, மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன திருவிழாக்கள் 10 நாட்கள் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று சித்திரை விசுத் திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு குற்றாலநாதர் சன்னிதானம் எதிரே உள்ள கொடிமரத்தில் இன்று காலையில் வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் இசையுடன் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு மா பொடி, மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், ஜவ்வாது, பால், தயிர், இளநீர் உளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக 12 ம் தேதி திருக்கோவிலில் உள்ள மணிமண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கு பச்சை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தாண்டவ தீபாராதனை நடைபெறும். 14ஆம் தேதி விசு தீர்த்தவாரி நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com